Posts

Showing posts from January, 2011

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

Image
(இந்தச் சொற்களில் படர்ந்திருக்கும் என் நினைப்புகளை சிதையுங்கள், தவறுகளை சுட்டிக் காட்டுங்கள் - காலம் சஞ்சிகையில் வந்த ஆக்கம் இங்கே மீண்டும் .)  01 'யாரோ தள்ளிவிட்டதுபோல இருக்கிறது நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்' பிரக்ஞையற்று எழுதவில்லை, எழுத்துச் சுயமற்றோ, யாரையும் சார்ந்து நின்றோ எழுதவில்லை. ஹெமிங்வேயின் கிழவன் விட்ட தூண்டிற் கயிற்றை பெரிய மீன் இழுத்துச் செல்வதுபோல............................................................................... எழுத்து இழுத்துச் செல்கிறது . 'இருமை என்ற இந்தப் பிரபஞ்சச் சிறையின் சிலுவையில் அறையப்பட்ட சீவ ராசிகளுள் என்னைத் தேடாதீர் ' என்று கூறிய ஓர் எழுத்தாளனின் இலக்கிய முகத்தை என் எழுத்தால் துருவப் பார்க்கிறேன்/. துருவிக் கொள்வதற்கு எழுத்து உகந்த ஒன்றுதானா? எண்களால் ஒரு சமன்பாட்டை செய்து பார்ப்பது போல எழுத்தால் செய்து பார்க்கலாமா ? எண்களால் ஒரு விடையைச் சொல்ல முடிகிறது .எழுத்தால் விடை சொல்லலாமா ? எழுத்து எப்போதாவது ஒழுங்கான விடை சொல்லி இருக்கிறதா ? சரி ஏன் எண்களால் ஒரு இலக்கியம் எழுத முடியவில்லையே?