Posts

Showing posts from February, 2013

பிரண்டையாறு கதைப்புத்தகம்பற்றி த.அகிலன்.

கடலுக்கு அழைத்துச் செல்லும் கதைகள். ”எப்போதும் எனது வார்த்தைகளுக்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது” என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது.  இதற்குப்பின்னால் வருகிற என்னுடைய எல்லா வார்த்தைகளும் முடிந்த முடிவுகளோ மாற்றமுடியாத தீர்மானங்களோ கிடையாது. முடிந்த முடிவுகளாக எதையும் அறிவித்துவிடமுடியாத அரசியலறிவும், இலக்கிய அறிவுமே எனக்கிருக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன். புத்தகத்தின் சரி பிழைகளையோ, உள்ளமை, இல்லாமை பற்றியோ எனக்கெந்த விசனங்களும் கிடையாது.  மெலிஞ்சி முத்தனின் கதைகள் என்னை அழைத்துச் சென்ற பாதையை விபரிப்பதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். வாசிப்பின் பயணம் என்பது, அதிசயங்களைத் தேடுகிற பயணம்போல திருப்பங்களோடும், விருப்பு விருப்பின்மைகளோடும் ஆச்சரியங்களோடும் தன்பாட்டுக்கு நிகழ்வது என்று நான் நம்புகிறேன். உண்மையில் கூட்டங்களில் பேசுவது குறித்து எனக்கு அச்சம் இருக்கிறது. யார் யாருடைய கோபத்துக்கெல்லாம் ஆளாகவேண்டியிருக்குமோ? இவரை இவரையெல்லாம் திருப்திப்படுத்த வேண்டியிருக்குமோ? என ஒரு நடுக்கம் இருந்தது. பேசாமல் புனைபெயரில் பேசமுடியுமென்றால்

பிரண்டையாறு சிறுகதைப் புத்தகம் பற்றி மீராபாரதி

Image
பிரண்டையாறு: ஆழ்மனதில் ஓடுகின்ற … எண்ணங்கள் … ஒரு முறை திருகோணமலை துறை முகத்திலிருந்து மூதூருக்கு கடல் கடந்து சென்று கொண்டிருந்தோம். இக் கடல் பாதையின் குறுக்காகதான் மாகாவலி கங்கை வந்து கடலில் சேருகின்றது என நண்பர்கள் குறிப்பிட்டார்கள். அந்த கங்கையானது, இக் கடலின் அடியில், மிகவேகமாக பாய்ந்து செல்கின்றது. கடலின் அடியில் ஒடும் ஆறு என அதை அன்று புரிந்து கொண்டேன். இது நடந்து 22 வருடங்களின் பின்பு, இவ்வாறான பல ஆறுகள் கடலில் அடியில் ஓடுகின்ற எனவும், அதற்கு ஒரு பெயர் உண்டு எனவும் நண்பர் மெலிஞ்சி முத்தனின் விளக்கத்தினுடாக அறிந்து கொண்டேன். அவரின் சிறுகதை தொகுதியின் தலைப்பான “பிரண்டையாறு”தான் அதற்கான பெயர். பிரண்டையாறு தொகுதியிலுள்ள சிறுகதைகள், கடலின் அடியில் ஓடும் ஆறுபோல, நம் ஆழ் மனதிற்குள் ஓடும் எண்ணங்கள் என்றால் மிகையல்ல. பிரண்டையாறு தொகுதியிலுள்ள சிறுகதைகளுக்குள் சின்னஞ் சிறு கதைகளும் உள்ளன. அதேவேளை, இதில் உள்ள எல்லாக் கதைகளுக்குள்ளும் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற… தன்னைச் சுற்றி நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருக்கின்ற… அதனால் பாதிக்கப்பட்ட உணர்வுகளைக் கொண்ட ஒரு மனிதர், மாணங்கி, மற்றும் ஆசி

'பிரண்டையாறு' பற்றி தர்மினி

தர்மினி பன்னிரண்டு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு பிரண்டையாறு. கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மெலிஞ்சிமுத்தன் ஒருகவிஞரும் ஓவியங்களை வரைவதில்ஆர்வமுடையவரும்கூட. ஏற்கனவே ‘சிதையும் என்னுள்’ -’என் தேசக்கரையோரம்’ -’முட்களின் இடுக்கில்’ ஆகிய கவிதைத் தொகுதிகளும் கனவுகளின் தொகுப்பென ‘வேருலகு’ பிரண்டையாறைத் தொடர்ந்து இந்த வருடம் ‘அத்தாங்கு ‘ என்ற நாவலும் மெலிஞ்சிமுத்தனால் எழுதப்பட்டுள்ளன. 1990 இல் பெரும் எடுப்பில் தீவுப்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்ட சிறீலங்கா இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளினால் ஊர்காவற்றுறையின் மெலிஞ்சிமுனைக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து ஓர்அகதியாக அலைந்து   இறுதியாக ஒரு நாட்டைக் கண்டு விட்ட போதும் தன்நினைவுகளில்,ஏன்?பெயரிலும்தான் அக்கிராமத்தையும் கடலின்கதைகளையும் இத்தனை வருடங்களானாலும் தன்னோடு சுமந்துவாழும் மென்மனதுடைய கதை சொல்லியாக, பிரண்டையாறின் மனிதர்களோடு ஒருவராக, நம்முடன் உரையாடிக்கொண்டு வரும் குரலாகவென்று, மெலிஞ்சிமுத்தன் இப்பன்னிருகதைகளோடு அலைகிறார். இந்தப் புத்தகத்தின் பெயரைக் கேள்விப்பட்டவுடனே எனக்கு ஏற்பட்ட  கேள்வி பிரண்டையாறு என்றொரு ஆறு இலங