…ராணி………………………………..
சிறு,சிறு பற்றைக் காடுகள், ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வீதி குறுக்கு மறுக்காய் வீதி கடந்து ஓடும் நரிகள், தம்மைப் பிடிக்க யாரோ வந்திருக்கிறார்கள் என்ற நினைப்பில் தொடர்ந்தோடிச் சிலிர்க்கும் முயல்கள்…….. அந்த முயல்கள்… அவற்றின் பயம், ஓட்டம், குறண்டல், பதுங்கல்…. பாவம் அந்த முயல்கள். இருண்ட காட்டின் அமைதியைக் குலைத்த படி இரண்டு ஒளிக் கோடுகளை ஏவிச் செல்லும் சிவப்பு வாகனமொன்றினுள் தலை மாற்றி இரண்டு விமானங்களிலேறி நாடுகளின் எல்லைகளைக் கடந்த மூன்று மனிதர்கள் இருந்தனர். யாழ்ப்பாணமும், மன்னாரும், மட்டக்களப்பும் கூட அந்த வாகனத்துள் மன முடிச்சுகளாய் இருந்தன. மூன்று மனிதர்கழுக்கும் ஆறு பெயர்கள் இருந்தன. விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் தத்தமது இரவற் பெயர்களை கைவிடாதவர்களாய் தமக்கே உரிய ரகசியங்களை தமது மன முடிச்சு களுக்குள் வைத்திருந்தனர். வாகனம் ஒரு வீட்டின் முன்னே நின்றபோது ‘தவசீலன் ‘எனப்படும் இளைஞன் மட்டும் இறக்கப்பட்டான். மிகுதி இருவருமே தத்தமது இரகசியங்களைச் சுமந்தபடியே கடந்து சென்றனர். கதவுஒருமுறை சட்டெனத் திறந்தபோது வீடு அவனை விழுங்கிக் கொண்டது. கொஞ்சம் முத...