Tuesday, August 28, 2012

ஏற்றுக்கொள்ளப்படாத பாத்திரத்தின் மூன்று பாடல்கள்.போத்துக்கல், ஸ்பெய்ன் நாடுகளின் பழங்கதைகளின் பாத்திரங்கள் பல எங்கள் கிராமத்தில் உலாவித் திரிகின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘ஊர்சோன்’.
ஊர்சோன் ஓர் அரசகுடும்பத்தில் பிறந்தவன். அரச குடும்பத்தில் நிகழ்ந்த
அசம்பாவிதம் ஒன்றால் அரசி காட்டுக்குள் இரண்டு குழந்தைகளை பெற்றுப்
போடுகிறாள். குழந்தைகள் இருவரும் ஆண்கள் ஒருவன் ‘ஊர்சோன்’ மற்றவன் ‘பாலந்தை’ ஊர்சோன் குழந்தையாக இருக்கும்போதே அவனை
கரடியொன்று தூக்கிச் சென்றது. கரடிக்கு ஏன் அப்படியொரு ஆசை வந்ததோ தெரியவில்லை. அல்லது கரடி அப்போது எதன் குறியீடாக இருந்ததுவோ! அதுவும் புரியவில்லை. அக்கரடி தனக்கான காட்டுக்குள் ஊர்சோனை வளர்த்துவந்தது என்பதே மூலக் கதை.


கட்டியகாரனைத் தொலைத்த தென்மோடிஈழத்தமிழரின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்துக் கலை ஆகும்.   கிராமியக் கலை, அல்லது நாட்டார் கலைவடிவம் என்ற சொற்களால் புரிதலுக்கு உட்படுத்தப்படும் இக்கலை/ வளர்ச்சிகுன்றிப் போனமைக்கான காரணங்களில் ‘நாட்டார்’ என்ற சொல்லுக்குப் பின்னால் இருந்த மனோநிலையும் ஒருவகைக்காரணம் எனலாம். முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர் என்றும், கூத்து என்கின்ற சொல்லே குதித்தல் என்ற சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் சிலர் சொல்வதுண்டு. அதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று பின்னர் வளர்த்தெடுக்கப்பட்ட வடிவங்களாகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.


Saturday, August 25, 2012

நெய்தல் நிலப் பெண்டிர் மனப்போக்கு(தென்மோடிப்பாடல்)


முள்ளிக் காடே முழுமதியே                                                        
கண்ணுறங்காதே – மச்சான்                                                          
வள்ளம் தள்ளிப் போனகடல்                                                        
அலையே பொங்காதே

இல்ஹாம்முற்கூட்டியே கணித்துக்கொள்ள முடியாத விசித்திரமான புதுநாட்களுள்நாம் ஒவ்வொருவரும் சந்தர்ப்பவாதிகளேஒருநாள் நம் முன்னே எழுப்பிநிற்கும் கேள்விகளுக்கு எழுந்தமாமாய் பதில் சொல்லியபடியேநகர்கிறோம்.... இப்படியானதொரு புதுநாளில்தான் சாளரத்தின் வெளியேஎட்டிப் பார்க்கிறேன் கொட்டும் பனிக்குள் தலையில்கூட தொப்பிஎதுவுமின்றி என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான் இல்ஹாம்.இத்தனை ஆண்டுகள் கடந்தபின்னும் அவன் எதற்காக என்னையேபின்தொடர்ந்தபடி இருக்கி றான்என்ற கேள்வியுடனேயே வேலைக்குவெளிக்கிடுகின்றேன்... இல்ஹாம்இல்ஹாம் என்று உதடுகள்உச்சரித்தபடியே இருக்கின்றன.


அதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.

கனடா தமிழ் இலக்கியத்தின் மறுபக்க வரலாறு. நாம் நம் வரலாற்றை புகழ்ச்சிகளின் கோர்வையாக அமைத்துவிட்டுப் போகவே விரும்புகின்றோம். ஆனால்...