
தனிமையோடு இருக்கிறான் தனியன். தனிமைக்கு இரண்டு வாசல். ஒன்று துயருக்கு, அடுத்தது எபோதுமே புதிராய் இருக்கிறது. புதிரின் மீது மொழியை விரிக்கிறான். மொழிச்சுருள் கலைந்து புதிருக்குள் போகிறது. ஒருகால் தன்னில் ஊன்றி, மறுகால் உயர்த்தி புதிரில் தேடுகிறான் தான் விரிய தக்கது கிடைக்குமென்று. மொழிவிரிப்பு புதிரோடு தாக்கமுறுகிறது காலால் கோலி கவிதையெனச் சொல்கிறான். மறுகதவால் யார்,யாரோ வருகிறார்கள்,போகிறார்கள். தனிமை ஸ்தம்பிப்பதற்காக அல்ல என்கிறான் இவன். எப்போதுமே சாத்தப்படக்கூடிய கதவுகளுக்குள் நின்றபடிதான் எத்தனை வாதங்கள்! தனிமைக்கு இன்னமும் எத்தனை கதவுகளை எவரெவர் காண்கின்றனரோ.