ஒற்றைச் சிறகால் ஒருபறவை
என்னுள் பறக்கிறதே
கொத்தும் அலகால் அது எந்தன்
குடலைத் தின்கிறதே
என்றோ நான் விழுங்கிய முட்டை
இன்றென்னுள் பொரித்தது
இன்றதுவோ என்னையும் தூக்கி
வானத்தில் பறக்குது............
(ஒற்றைச்..................)

கனவுலகம் சென்று வந்தேன்
கனவுக்குள்ளே என்னைக் கண்டேன்
என்றும் நான் கண்டிராத
முகமாக இருக்கக் கண்டேன்
என்முகமே என்முகமே
இத்தனை நாள் எங்கிருந்தாய்?
என்றே நான் முனகிக் கொண்டேன்
இப்போதான் திரும்பி வந்தேன்.


(ஒற்றைச்....................)
உள்ளியங்கும் ஓர் உலகம்
ஊமைக் காற்றாய் நானிருப்பேன்
சொல்லைவிட வல்லதொன்று
அவ்வுலகை ஆட்டிவைக்கும்
உள்ளொளியில் கண்டதெல்லாம்
உன்னுடனே சொல்லி வைத்தேன்
சொல்லைவிட ஏதோ ஒன்றால்
சொல்லிவிட முயலுகின்றேன்.............


(ஒற்றைச்..................)

Comments

suruthi said…
உங்கள் எழுத்தில் இழந்த இதயம் நான்
ஒற்றைசிறகு குருவியாய்
புண்ணான நெஞ்சத்துடன்
பறப்பதை மறந்திருக்கிறேன்

Popular Posts