.................................

அருகில்லை,
உருவில்லை,
அரூபமும் இல்லை நான்.
ஆணொரு பொருட்டா என்ன.....


போர்த்தது, உதிர்த்தது
போய்வர இருப்பது
நானெனச் சொல்லும்
'நீ ' எனச் சொல்ல நாதியற்றேன்.


ராட்டினம் சுற்றும்
மேலெது? கீழெது?
குழந்தைமையும்,பெற்றார்மையும் மோதிக்
குப்புற வீழ்கிறேன் - இக்கணம்
மேலெது................ கீழெது.


' நான்' எனும் வெற்றிடத்தை
நான்கூட நிரப்பவில்லை.
'நீ ' எனச் சொல்ல நாதியற்றேன்.

Comments