இப்னுபதூதாவும், இலக்கியக் கூட்டமும். ( முன்னுரை) டொரன்ரோவில் தேவ அபிரா எழுதிய ‘இருள் தின்ற ஈழம்’ புத்தக வெளியீடு நிகழ்ந்தபோது. நான் அதில் பேசுவதற்காக கேட்கப்பட்டிருந்தேன்.புத்தகத்தை வாசித்தபோது சில ஆண்டுகளின் முன்னர் என்னை ஈர்த்திருந்த தேவ அபிராவின் கவிதைகள் இம்முறை வாசித்தபோது எனக்கு எவ்வகைக் கலை அனுபவத்தையும் ஏற்படுத்தவில்லை. அதற்கு எழுத்தாளர் மட்டுமல்ல, காலமும், சூழலும்,வாசகரும் கூடத்தான் காரணம். ஆனால் அக்கவிதைகளை வாசித்தபோது அவை நவீன கவிதைகளாய் இருந்தபோதும் மரபை அறுத்துவிடாதவையாய் இருந்தன. ‘தமிழ்க்கவிதையின்’ அடையாளங்களாகவே அவற்றைப் பார்த்தேன். ஆனாலும் எனக்கு புதுமை வேண்டியிருக்கிறதே. தேவஅபிரா நிதானமான ஒருகவிஞர்,சமூக அக்கறை அவருடைய கவிதைகளில் இருக்கின்றது. ஆனாலும் ஈழத்து நவீன கவிதையின் போக்கிலிருந்து விலகாதவை அவை.நவீன கவிதைப் போக்குக்குள் காத்திரமானவை என்றுகூடச் சொல்லலாம். சிங்களதீபத்தில் சிறுபான்மை இனங்களுக்கான ஜனநாயகம்,போரின் விலை,தேர்தல்,சிங்களதேசம்,எலும்புக்கூடும் இரண்டுகனவுகளும்,விடுதலை, போரின் விலை, இவை புத்தகத்தில் வந்த கவிதைகள் சிலவற்றின் தலைப்புகள். கவிதைக்க...
Posts
Showing posts from June, 2013