ஒழுக்கக் கோர்வை.

காலையில் வேலைக்கு கூட்டிச் செல்வதற்காக தியாகு வாகனம் கொண்டுவந்திருந்தான். நான் வாகனத்தில் ஏறும்போது அவதானித்தேன் எங்கள் வீதியில் எங்கள் வீட்டிலிருந்து நான்காவதாய் தள்ளியிருந்த அந்த வீட்டின் முன்புறம் குந்தியிருந்து அவள் அழுதுகொண்டே இருக்கிறாள். நேற்று வேலை முடிந்து வரும்போதும் அவள் அங்கேதான் இருந்தாள்,இரவு அவளுடைய வீட்டிற்கு காவற்துறையினரின் வாகனம் வந்துபோனதையும் அவதானித்தேன். அவளைப் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாகவே இருந்தது, ஆனால்/ அவளுடைய கணவன் மிகவும் மோசமானவன்,யாழ்ப்பாணத்தை அப்படியே பிரட்டிக்கொண்டுவந்து கனடாவில் வாழ்பவன். எப்போது பார்த்தாலும் வெள்ளை,சிவப்பு இனத்தினரைத்தவிர மஞ்சள்,கறுப்பு இனத்தினரோடு கொஞ்சம் கடுகடுப்பாகவே நடந்துகொள்பவன். அதிலும் தமிழர்கள் யாரேனும் அவன் வீட்டுக்குப் போனால் ஊரையும் குறிச்சியையும் விசாரிக்கத் தொடங்கிவிடுவான். மாவீரர் தினம் ஒன்றிற்கு காசு சேர்க்கச் சென்றபோது என்னுடனும் அப்படித்தான் நடந்துகொண்டான். எனக்கு அவன்மீது கொஞ்சமும் மரியாதை இல்லை. அவனுடைய ஒருவகை கோணல் பார்வையை பார்க்கும்போதே முகத்தினில் குத்தவேண்டும்போல இருக்கும். ஆனாலும் அவனுடைய மனைவிய...