Posts

Showing posts from August, 2010

சிரிப்புச் சத்தம் கேட்ட கிராமம்.

அப்போது நான் நடந்துகொண்டிருந்தேன். அன்றிரவு நான் கனவில்கண்ட அந்தக் கிராமம் என் நினைவிலிருந்து முற்றாக அழிந்து போவதற்குள் அந்தக் கிராமத்தை அடைந்து விடவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் நிறைந்திருந்தது. வீதி முழுதும்அங்குமிங்குமாய் பயணித்துக் கொண்டிருந்த மனிதர்களைக் கவனித்தபடியே நடந்துகொண்டிருந்தேன். அநேக முகங்களில் நேரம் குறித்த பயம் இருந்தது. சில முகங்களோ வீதியோரத்து இருக்கைகளில் தொங்கிக் கிடந்தன. ஆயினும் வீதிகளில் நடந்து செல்லும் மனிதர்கள் குறைவுதான். உடல்முழுதும் காற்றை வாங்கிக் கொண்டு. நிலத்தை ஸ்பரிசித்துக்கொண்டு நடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துதான் போய்விட்டது. அநேக பொழுதுகள் வாகனங்களுக்குள்ளேயே கழிந்து விடுகின்றன. வாகனத்துக்குள்ளேயே வெம்மையும்,குழிருமான காற்று, வானொலி, படக்காட்சி, தொலைபேசியென்று இன்னும் இன்னும் சுருங்கிய குட்டி உலகங்கள். வெய்யில் காலத்தில் இயற்கையை ரசிப்பது கூட சிலருக்கு ஒரு சம்பிரதாயம்.இவற்றையெல்லாம் பார்த்தபடியே ஒரு பூங்காவின் ஓரத்தால் விசுக்கு,விசுக்கென்று நடந்து கொண்டிருந்தேன். அந்தப் பூங்காவிலிருந்து கொத்துக் கொத்தாக வெளியேறிக்கொண்டிருந்தது நறுமணம். பூங்கா ஓரத்து

கொழுக்கட்டைக் கள்வர்கள்

நேசனே உம் கைகளில் நீண்ட இரும்பாணிகள் நிட்டூரமாயறய நேசக் கண்ணீர் சொரிந்து பலி ஆனீர்......... ' பதின் நான்காம் ஸ்தலம்" முடிந்ததன் பிறகும் திரும்பவும் பீடத்தை நோக்கித் திரும்பி சிலுவைப் பாதையில் இல்லாத செபம் ஒன்றைத் தொடங்கி புதுசாய் ஒரு குறுக்குப் பாதையை தொடங்கிக் கொண்டிருப்பார் 'சங்கித்தன்". சங்கித்தன் எவ்வளவுதான் கெட்டிக் காரனாய் இருந்தாலும் பழய செபங்களையும் புதுச்செபங்களையும் பொருத்துவது என்றால் கொஞ்சம் கடினமான வேலைதான். இருந்தாலும் எல்லாத்துக்கும் இடையில் கொஞ்சம் 'பரமண்டல மந்திரத்தையும்"கொஞ்சம் பிரியத்த மந்திரத்தையும் கலந்துகட்டி ஒப்பேற்றினால் கால வித்தியாசம் தெரியாது. கால வித்தியாசம் தெரியவில்லையென்றாலும் 'கால்" வித்தியாசம் தெரியும். எனக்கு முழங்கால் மடக்கி இருப்பதென்றாலே சரிவராததொரு வேலை. ஆனாலும் கோயிலுக்குள் நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை எனக்குப் பின்னால் இருந்து 'சவீனா ரீச்சர்" கண்குத்திப் பார்த்துக்கொண்டிருப்பாள். நான் முழங்காலில் இருக்கவில்லை என்றாலோ, பக்கத்திலிருக்கிற சளிப்பயல் இன்பராசைச் சுறண்டிக் கதைத்தாலோ பின்னால் நசியாமல்

கூட்டிச் செல்லும் குரல்.

காலையில் எழுந்து நடக்கத் தொடங்கினான் மாணங்கி. விரும்பியே அலையும் மனநிலையொன்றின் காரணமென்ன என்ற கேள்வியொன்றை யோசித்தபடி...... சிந்திப்பதற்கும்,நடத்தலுக்குமான தொடர்பு வெறும் பளக்கத்தால் வந்ததாகத் தெரியவில்லை. நடக்கும்போதில்கால்களாலேயே சிந்திப்பது போன்றதொரு புரிதல் அவனுள்ளே நிகழ்ந்தபடியே இருக்கிறது. அவன் நடந்துகொண்டிருந்தான்............ செல் பேசிமணி ஒலித்தது எடுத்தபோது மறுபுறத்தில் கரகரத்ததொரு குரல்/ எங்கே நிற்கிறாய்? நான் நடந்துகொண்டிருக்கிறேன்..... யாரோடு போகிறாய்? நானும்,நானும்,நானும்... நான்களோடு.... சரி.... எங்கே போகிறாய்? என் தேசத்திலிருக்கும் என் கிராமத்தையும் தாண்டி.... என்னச் சந்திக்கிற விருப்பமேதாவது இருக்கோ? நீ மையப்படுத்தப் பட்டிருக்கிற ஒன்றாய் தென்பட்டால் உன்னை நான் காண விரும்ப இல்ல ..... நானும் உன்னப் போலதான் முடிஞ்சால் வா.... எங்க நிக்கிறாய்? ஆற்றங்கரையில........ கரகரத்த குரல் செல்பேசியை வைத்துவிட்டது.... அந்தக் குரலுடன் உரையாடிய பின்னர் கொஞ்சம் வார்த்தைகள் மிச்சமிருப்பதாய் உணர்ந்தான் குரல் சொன்ன இடம் தேடி புறங்கைக் கட்டோடு நடக்கலானான். வாழ்க்கை முழுவதும் அவ

அலாரக் கதவு

என் அருமையான வாசகரே / யாரோ என்னைக் கூட்டிச் சென்றார்கள். அவர்கள் யாரோ வீட்டில் விட்டார்கள். நான் யாரென்ற புற அடையாளத்திற்குத் தொலைவில் நின்றபோது ‘நீங்கள் யார்” என்று யாரோ கேட்டார்கள். அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்றேன் நான். அந்த ஒற்றைச் சாளர அறையில் என்னை தனியே விட்டு அவர்கள் மறைந்து போனார்கள். மறைவதற்கு முன்னர் ‘பிடிபட்டு விடாதே’ என்று சொல்லிச் சென்றார்கள்………………………………………………. மனதின் சூக்குமமான வேர் துயரச் சுனையில் விழுந்துவிட்டாற்போல்…… அறிவுக் கண் அடைத்துக்கொண்டிருக்கும் இந்த மந்தாரமான வெளியில் ‘சாளரக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு நான் தனியனில்லையெனும் மனநிலையைத் தோற்றுவிக்கும் பாசாங்கு மிகுந்த முயற்சியில் இறங்கியிருக்கும் நான் என்னைமுந்திக் கடந்துவந்த சொற்களைக் கூட்டியள்ளி உங்களோடு பேச முயல்கிறேன்…………………………………….. என் தலைமாட்டில் சவக்காலை யொன்று திறந்து கிடப்பதையும், செழும்பு பிடித்த பிணைச்சல்களோடு அதன் பழமையான கதவுகள் ஒரு அலாரத்தைப் போல கிறீச்சிட்டுக் கொண்டிருப்பதையும் உங்களுக்குச் சொல்லவேண்டும். சவக்காலையின் அலாரம் கணிக்கமுடியாததொரு காலத்தில் இரைந்து கொண்டிருப்பதையும்,