Posts

Showing posts from August, 2020

மாயச் சுவர்

  மதங்கர்துறைப்   ‘ பயல்சுட்டாங்குளத்தின்’   அருகில்தான் அமைந்திருக்கிறது நாடகப்பிட்டி .. குளம் வெட்டிக் குவித்த மண்ணில் கூத்தாடிய காலத்திலிருந்தே தோன்றிற்று அந்தப் பெயர் . நாடகப் பிட்டியில் இப்போது பெரியதொரு பாதிவட்டமாய் அமைந்திருக்கிறது ‘ திருக்குடும்ப அரங்கம் ’. ஒப்பேற்றப்படும் கூத்துக்களை மட்டுமே திரைவிலக்கிக் காட்டும் அந்த அரங்கத்தின் பின்னால் நடக்கும் கூத்துக்களை அனேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மதங்கர்துறையில் ‘ சின்னப்பட்டாணி பிலிப்புப்பிள்ளை ’ என்று பெயரெடுத்த ஒரு அண்ணாவியார் இருந்தார் . ‘ சந்தியோகுமையோர் ’ கோயில் ஆலமரப் பொந்திலிருந்து அவருக்கு ஒரு எழுதுகோல் கிடைத்ததாகவும் , அதையெடுத்து அவர் சந்தியோகுமையோருக்கு பாட்டுக்கட்டியதாகவும் , பின் வந்த காலத்தில் அவர் பல கூத்துக்களை எழுதியதாகவும் கதைகள் உண்டு . மதங்கர் துறைக் கடலில் ‘ திருக்கை மீன்கள் ’ கூட்டம் , கூட்டமாய் வந்து மீனவர்களை அச்சுறுத்தியபோது பிலுப்புப் பிள்ளைதான் மன்றாட்டுப்பாடல் இசைத்து கடலைக் கட்டினாராம் . அதற்கு முன்னர் ‘திருக்கை மீன்கள்’   இந்து ச