Posts

Showing posts from October, 2013

திரைப்பட ரசனைக் குறிப்பு.

Image
நம் சமூகம் என்ற கூட்டுமனம் ஒரு வகை ஒழுங்கைக் கண்டடைந்திருக்கிறது. அந்த ஒழுங்காலான தளத்தில்தான் தன் அனைத்துவகையான நிகழ்த்துதலையும் செய்துவருகிறது. இந்தக் கூட்டு மனதின் அடியில் கசிந்துகிடக்கும் துயரமும்,எஞ்சிக்கிடக்கும் தோல்வியும்,விடுதலை உணர்வும்,தேசப்பற்றும்,குற்ற உணர்வும் இதன் எல்லா வகையான இயக்கத்திலும் தாக்கம் செலுத்திவருவது இயல்பானதே அதை மீறும் மனோநிலைக்கு நாம் இன்னமும் வரவில்லை. நமதுமொழி கதைகளின் கனத்தை வருந்திச் சுமக்கின்ற காலமிது. சொல்லிச்சொல்லி கனம்குறைக்க கதைசொல்லிகள் பலரை ஈன்றபடியிருக்கிறாள் நம் மொழித்தாய். ஈரத்தில் நனைந்த எறும்புகள் ஊர்வதைப்போலத்தான் நாம் கதைகளைக் கொண்டுவந்திருக்கிறோம். இறக்கிவைத்து இளைப்பாற ஒரு நாடு கிடைத்திருக்கிறது,அவகாசமும் கிடைத்திருக்கிறது. கொண்டுவந்த கதைகளோடு வந்த இடக்கதைகளும் பின்னிக்கொள்கின்றன.                      மொழி என்பதன் அடிப்படைக் குணம் அசைதல்தான் அந்த அசைதலின் லாவகத்தை உணர்ந்தவர்களே கலைஞர்கள். அசைதல் ஓர் அனுபவம். கலையும் அவ்வாறே.                                           ‘துப்பாக்கியும்,கணையாழியும்’ திரைப்படத்தை நான் ஒருமுறை ம