Posts

கதவுதிறக்கும் சொல்லாட்டம்

Image
சொற்களை கொஞ்சம் உரைத்துப் பார்க்கின்றேன். முடிந்தால் கொஞ்சம் 'உரைத்து ஆடலாம்'. சொற்களை நாம்தான் ஆட்டுகிறோம். ஆட்டம் உச்சம்பெறும்போது அவை நம்மை ஆட்டுகின்றன.ஆட்டம் என்ற கலையைத்தான் சொற்களின் மூலம் செய்து பார்க்கிறோமா? இசைகூட உள்ளுடலின் ஆட்டம்தானே. அசைதல்தான் மொழியின் மூலகுணம் என்பதால் ஆட்டத்துக்கு உகந்ததுதான் மொழி.

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

Image
'வழித்து மொட்டையான சவரக்கூட்டில் ஒட்டியிருந்து நேற்று, காதலி முகத்தில் குத்திய முடி சொன்னது - கழிந்து போகிறது காலம் வழிந்து போகிறது வாழ்க்கை என்று. உடல் பிழிந்து நெருப்பு மூட்டித் தீனியாக்கி, மலமாக்கி, அறிவு பொறுக்கி, நாச்சுழற்றி, மந்தம் வெளியேற்றி, மறுத்து, நீண்டு, நீண்டு, சுருங்கிச் சுருங்கி, நீளும் வாழ்க்கையில் எதனைக் கண்டோம்? கனவைத் தவிர!' இவ்வாறு வெறும் கனவைத் தவிர வாழ்க்கையில் வேறு எதனைக் கண்டோம் என்று -'பெருமூச்சோடு' என்ற பெயருடனான - தமது கவிதை ஒன்றில் அன்று அலுத்துக்கொண்ட அதே கவிஞன்தான் - சுமார் ஆறு வருடங்களின் பின்னர், தமது ஆழ்மனக் கனவுகளின் ஒரு கனபரிமாணத்தைத் தொகுத்து 'வேருலகு' என்ற பெயரில் ஒரு குறுநாவலாக இன்று வெளியிடுகின்றார்.

மையம் உடைக்கும் மனத்தளம் (மு.பொன்னம்பலம் பற்றிய சொற்கோலம்)

Image
(இந்தச் சொற்களில் படர்ந்திருக்கும் என் நினைப்புகளை சிதையுங்கள், தவறுகளை சுட்டிக் காட்டுங்கள் - காலம் சஞ்சிகையில் வந்த ஆக்கம் இங்கே மீண்டும் .)  01 'யாரோ தள்ளிவிட்டதுபோல இருக்கிறது நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்' பிரக்ஞையற்று எழுதவில்லை, எழுத்துச் சுயமற்றோ, யாரையும் சார்ந்து நின்றோ எழுதவில்லை. ஹெமிங்வேயின் கிழவன் விட்ட தூண்டிற் கயிற்றை பெரிய மீன் இழுத்துச் செல்வதுபோல............................................................................... எழுத்து இழுத்துச் செல்கிறது . 'இருமை என்ற இந்தப் பிரபஞ்சச் சிறையின் சிலுவையில் அறையப்பட்ட சீவ ராசிகளுள் என்னைத் தேடாதீர் ' என்று கூறிய ஓர் எழுத்தாளனின் இலக்கிய முகத்தை என் எழுத்தால் துருவப் பார்க்கிறேன்/. துருவிக் கொள்வதற்கு எழுத்து உகந்த ஒன்றுதானா? எண்களால் ஒரு சமன்பாட்டை செய்து பார்ப்பது போல எழுத்தால் செய்து பார்க்கலாமா ? எண்களால் ஒரு விடையைச் சொல்ல முடிகிறது .எழுத்தால் விடை சொல்லலாமா ? எழுத்து எப்போதாவது ஒழுங்கான விடை சொல்லி இருக்கிறதா ? சரி ஏன் எண்களால் ஒரு இலக்கியம் எழுத முடியவில்லையே?

இன்னமும் இருக்கும் மூக்கங்கி .

கட்டடத் தொழிலாளியாகிய நான் ஒவ்வொரு புதிய வீட்டு வேலை வரும்போதும் அந்த வீட்டின் மனிதர்களை நிதானமாக எதிர் நோக்கி ஒரு சிறிய புன்னகையோடு கடந்து வருவது வழக்கம் . சிலரின் முன்னால் 'மூக்கங்கி' போட்டுக் கொள்வதும் வசதிஎன்று கருதுவேன் . சில நேரங்களில் சுவரைப் பார்த்து பல மனிதர்களை நினைந்து தனிமையில் சிரிப்பதை மற்றவர்கள் பார்த்து என்னை 'ஒரு மாதிரி ' யோசிக்காமல் இருக்க மூக்கங்கி உதவியாக இருக்கிறது. மூக்கங்கி சில நேரங்களில் கவசகுண்டலம் போலும் . நான் ஓர் சராசரி யாழ்ப்பாணத்து நல்ல பிள்ளைதான் .கிறீஸ்தவம் போதித்த பத்துக் கட்டளைகளையும் சிரம்தாழ்த்தி அனுஷ்டிக்க முயல்பவன்தான். ஆனால் 'மாணங்கி' அப்படி இல்லை வேலைக்கு வரும்போதே மண்டைக்குள் கண்ணை வைத்துக் கொண்டுதான் வருவார். நான் கடினமான வேலை செய்து கொண்டு நிற்கும் போதும் வந்து ஏதாவது விவாதிக்க முயல்வார் . நான் கதவுக்கு மை பூசிக்கொண்டு நின்றால் வந்து ஒருவித நையாண்டிச் சிரிப்போடு 'ஓ மரத்தின் சவத்துக்கு மை பூசிக் கொண்டு நிற்கிறாய்போலும்' என்று கிண்டலடிப்பார் . எனது முதலாளி என்னுடன் நடந்து கொள்வது போல அவருடன் நடப்பதில்லை . முதலாளிய...

சிரிப்புச் சத்தம் கேட்ட கிராமம்.

அப்போது நான் நடந்துகொண்டிருந்தேன். அன்றிரவு நான் கனவில்கண்ட அந்தக் கிராமம் என் நினைவிலிருந்து முற்றாக அழிந்து போவதற்குள் அந்தக் கிராமத்தை அடைந்து விடவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் நிறைந்திருந்தது. வீதி முழுதும்அங்குமிங்குமாய் பயணித்துக் கொண்டிருந்த மனிதர்களைக் கவனித்தபடியே நடந்துகொண்டிருந்தேன். அநேக முகங்களில் நேரம் குறித்த பயம் இருந்தது. சில முகங்களோ வீதியோரத்து இருக்கைகளில் தொங்கிக் கிடந்தன. ஆயினும் வீதிகளில் நடந்து செல்லும் மனிதர்கள் குறைவுதான். உடல்முழுதும் காற்றை வாங்கிக் கொண்டு. நிலத்தை ஸ்பரிசித்துக்கொண்டு நடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துதான் போய்விட்டது. அநேக பொழுதுகள் வாகனங்களுக்குள்ளேயே கழிந்து விடுகின்றன. வாகனத்துக்குள்ளேயே வெம்மையும்,குழிருமான காற்று, வானொலி, படக்காட்சி, தொலைபேசியென்று இன்னும் இன்னும் சுருங்கிய குட்டி உலகங்கள். வெய்யில் காலத்தில் இயற்கையை ரசிப்பது கூட சிலருக்கு ஒரு சம்பிரதாயம்.இவற்றையெல்லாம் பார்த்தபடியே ஒரு பூங்காவின் ஓரத்தால் விசுக்கு,விசுக்கென்று நடந்து கொண்டிருந்தேன். அந்தப் பூங்காவிலிருந்து கொத்துக் கொத்தாக வெளியேறிக்கொண்டிருந்தது நறுமணம். பூங்கா ஓரத்து...

கொழுக்கட்டைக் கள்வர்கள்

நேசனே உம் கைகளில் நீண்ட இரும்பாணிகள் நிட்டூரமாயறய நேசக் கண்ணீர் சொரிந்து பலி ஆனீர்......... ' பதின் நான்காம் ஸ்தலம்" முடிந்ததன் பிறகும் திரும்பவும் பீடத்தை நோக்கித் திரும்பி சிலுவைப் பாதையில் இல்லாத செபம் ஒன்றைத் தொடங்கி புதுசாய் ஒரு குறுக்குப் பாதையை தொடங்கிக் கொண்டிருப்பார் 'சங்கித்தன்". சங்கித்தன் எவ்வளவுதான் கெட்டிக் காரனாய் இருந்தாலும் பழய செபங்களையும் புதுச்செபங்களையும் பொருத்துவது என்றால் கொஞ்சம் கடினமான வேலைதான். இருந்தாலும் எல்லாத்துக்கும் இடையில் கொஞ்சம் 'பரமண்டல மந்திரத்தையும்"கொஞ்சம் பிரியத்த மந்திரத்தையும் கலந்துகட்டி ஒப்பேற்றினால் கால வித்தியாசம் தெரியாது. கால வித்தியாசம் தெரியவில்லையென்றாலும் 'கால்" வித்தியாசம் தெரியும். எனக்கு முழங்கால் மடக்கி இருப்பதென்றாலே சரிவராததொரு வேலை. ஆனாலும் கோயிலுக்குள் நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை எனக்குப் பின்னால் இருந்து 'சவீனா ரீச்சர்" கண்குத்திப் பார்த்துக்கொண்டிருப்பாள். நான் முழங்காலில் இருக்கவில்லை என்றாலோ, பக்கத்திலிருக்கிற சளிப்பயல் இன்பராசைச் சுறண்டிக் கதைத்தாலோ பின்னால் நசியாமல் ...

கூட்டிச் செல்லும் குரல்.

காலையில் எழுந்து நடக்கத் தொடங்கினான் மாணங்கி. விரும்பியே அலையும் மனநிலையொன்றின் காரணமென்ன என்ற கேள்வியொன்றை யோசித்தபடி...... சிந்திப்பதற்கும்,நடத்தலுக்குமான தொடர்பு வெறும் பளக்கத்தால் வந்ததாகத் தெரியவில்லை. நடக்கும்போதில்கால்களாலேயே சிந்திப்பது போன்றதொரு புரிதல் அவனுள்ளே நிகழ்ந்தபடியே இருக்கிறது. அவன் நடந்துகொண்டிருந்தான்............ செல் பேசிமணி ஒலித்தது எடுத்தபோது மறுபுறத்தில் கரகரத்ததொரு குரல்/ எங்கே நிற்கிறாய்? நான் நடந்துகொண்டிருக்கிறேன்..... யாரோடு போகிறாய்? நானும்,நானும்,நானும்... நான்களோடு.... சரி.... எங்கே போகிறாய்? என் தேசத்திலிருக்கும் என் கிராமத்தையும் தாண்டி.... என்னச் சந்திக்கிற விருப்பமேதாவது இருக்கோ? நீ மையப்படுத்தப் பட்டிருக்கிற ஒன்றாய் தென்பட்டால் உன்னை நான் காண விரும்ப இல்ல ..... நானும் உன்னப் போலதான் முடிஞ்சால் வா.... எங்க நிக்கிறாய்? ஆற்றங்கரையில........ கரகரத்த குரல் செல்பேசியை வைத்துவிட்டது.... அந்தக் குரலுடன் உரையாடிய பின்னர் கொஞ்சம் வார்த்தைகள் மிச்சமிருப்பதாய் உணர்ந்தான் குரல் சொன்ன இடம் தேடி புறங்கைக் கட்டோடு நடக்கலானான். வாழ்க்கை முழுவதும் அவ...