Posts

.................................

அருகில்லை, உருவில்லை, அரூபமும் இல்லை நான். ஆணொரு பொருட்டா என்ன..... போர்த்தது, உதிர்த்தது போய்வர இருப்பது நானெனச் சொல்லும் 'நீ ' எனச் சொல்ல நாதியற்றேன். ராட்டினம் சுற்றும் மேலெது? கீழெது? குழந்தைமையும்,பெற்றார்மையும் மோதிக் குப்புற வீழ்கிறேன் - இக்கணம் மேலெது................ கீழெது. ' நான்' எனும் வெற்றிடத்தை நான்கூட நிரப்பவில்லை. 'நீ ' எனச் சொல்ல நாதியற்றேன்.

ஏற்றுக்கொள்ளப்படாத பாத்திரத்தின் மூன்று பாடல்கள்.

Image
போத்துக்கல், ஸ்பெய்ன் நாடுகளின் பழங்கதைகளின் பாத்திரங்கள் பல எங்கள் கிராமத்தில் உலாவித் திரிகின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘ஊர்சோன்’. ஊர்சோன் ஓர் அரசகுடும்பத்தில் பிறந்தவன். அரச குடும்பத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம் ஒன்றால் அரசி காட்டுக்குள் இரண்டு குழந்தைகளை பெற்றுப் போடுகிறாள். குழந்தைகள் இருவரும் ஆண்கள் ஒருவன் ‘ஊர்சோன்’ மற்றவன் ‘பாலந்தை’ ஊர்சோன் குழந்தையாக இருக்கும்போதே அவனை கரடியொன்று தூக்கிச் சென்றது. கரடிக்கு ஏன் அப்படியொரு ஆசை வந்ததோ தெரியவில்லை. அல்லது கரடி அப்போது எதன் குறியீடாக இருந்ததுவோ! அதுவும் புரியவில்லை. அக்கரடி தனக்கான காட்டுக்குள் ஊர்சோனை வளர்த்துவந்தது என்பதே மூலக் கதை.

கட்டியகாரனைத் தொலைத்த தென்மோடி

Image
ஈழத்தமிழரின் பாரம்பரியக் கலை வடிவங்களில் ஒன்று. கூத்துக் கலை ஆகும்.   கிராமியக் கலை, அல்லது நாட்டார் கலைவடிவம் என்ற சொற்களால் புரிதலுக்கு உட்படுத்தப்படும் இக்கலை/ வளர்ச்சிகுன்றிப் போனமைக்கான காரணங்களில் ‘நாட்டார்’ என்ற சொல்லுக்குப் பின்னால் இருந்த மனோநிலையும் ஒருவகைக்காரணம் எனலாம். முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர் என்றும், கூத்து என்கின்ற சொல்லே குதித்தல் என்ற சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் சிலர் சொல்வதுண்டு. அதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று பின்னர் வளர்த்தெடுக்கப்பட்ட வடிவங்களாகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

நெய்தல் நிலப் பெண்டிர் மனப்போக்கு

Image
(தென்மோடிப்பாடல்) முள்ளிக் காடே முழுமதியே                                                         கண்ணுறங்காதே – மச்சான்                                                           வள்ளம் தள்ளிப் போனகடல்                                                         அலையே பொங்காதே

இல்ஹாம்

Image
முற்கூட்டியே   கணித்துக்கொள்ள   முடியாத   விசித்திரமான   புதுநாட்களுள் நாம்   ஒவ்வொருவரும்   சந்தர்ப்பவாதிகளே .  ஒருநாள்   நம்   முன்னே   எழுப்பி நிற்கும்   கேள்விகளுக்கு   எழுந்தமா ன மாய்   பதில்   சொல்லியபடியே நகர்கிறோம் ....  இப்படியானதொரு   புதுநாளில்தான்   சாளரத்தின்   வெளியே எட்டிப்   பார்க்கிறேன்   கொட்டும்   பனிக்குள்   தலையில்கூட   தொப்பி எதுவுமின்றி   என்னையே   பார்த்துக்   கொண்டிருக்கிறான்   இல்ஹாம் . இத்தனை   ஆண்டுகள்   கடந்தபின்னும்   அவன்   எதற்காக   என்னையே பின்தொடர்ந்தபடி   இருக்கி   றான் ?  என்ற   கேள்வியுடனேயே   வேலைக்கு வெளிக்கிடுகின்றேன் ...  இல்ஹாம் ,  இல்ஹாம்   என்று   உதடுகள் உச்சரித்தபடியே   இருக்கின்றன .

கதவுதிறக்கும் சொல்லாட்டம்

Image
சொற்களை கொஞ்சம் உரைத்துப் பார்க்கின்றேன். முடிந்தால் கொஞ்சம் 'உரைத்து ஆடலாம்'. சொற்களை நாம்தான் ஆட்டுகிறோம். ஆட்டம் உச்சம்பெறும்போது அவை நம்மை ஆட்டுகின்றன.ஆட்டம் என்ற கலையைத்தான் சொற்களின் மூலம் செய்து பார்க்கிறோமா? இசைகூட உள்ளுடலின் ஆட்டம்தானே. அசைதல்தான் மொழியின் மூலகுணம் என்பதால் ஆட்டத்துக்கு உகந்ததுதான் மொழி.

மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு -க.நவம்

Image
'வழித்து மொட்டையான சவரக்கூட்டில் ஒட்டியிருந்து நேற்று, காதலி முகத்தில் குத்திய முடி சொன்னது - கழிந்து போகிறது காலம் வழிந்து போகிறது வாழ்க்கை என்று. உடல் பிழிந்து நெருப்பு மூட்டித் தீனியாக்கி, மலமாக்கி, அறிவு பொறுக்கி, நாச்சுழற்றி, மந்தம் வெளியேற்றி, மறுத்து, நீண்டு, நீண்டு, சுருங்கிச் சுருங்கி, நீளும் வாழ்க்கையில் எதனைக் கண்டோம்? கனவைத் தவிர!' இவ்வாறு வெறும் கனவைத் தவிர வாழ்க்கையில் வேறு எதனைக் கண்டோம் என்று -'பெருமூச்சோடு' என்ற பெயருடனான - தமது கவிதை ஒன்றில் அன்று அலுத்துக்கொண்ட அதே கவிஞன்தான் - சுமார் ஆறு வருடங்களின் பின்னர், தமது ஆழ்மனக் கனவுகளின் ஒரு கனபரிமாணத்தைத் தொகுத்து 'வேருலகு' என்ற பெயரில் ஒரு குறுநாவலாக இன்று வெளியிடுகின்றார்.