ஏற்றுக்கொள்ளப்படாத பாத்திரத்தின் மூன்று பாடல்கள்.

போத்துக்கல், ஸ்பெய்ன் நாடுகளின் பழங்கதைகளின் பாத்திரங்கள் பல எங்கள் கிராமத்தில் உலாவித் திரிகின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘ஊர்சோன்’. ஊர்சோன் ஓர் அரசகுடும்பத்தில் பிறந்தவன். அரச குடும்பத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம் ஒன்றால் அரசி காட்டுக்குள் இரண்டு குழந்தைகளை பெற்றுப் போடுகிறாள். குழந்தைகள் இருவரும் ஆண்கள் ஒருவன் ‘ஊர்சோன்’ மற்றவன் ‘பாலந்தை’ ஊர்சோன் குழந்தையாக இருக்கும்போதே அவனை கரடியொன்று தூக்கிச் சென்றது. கரடிக்கு ஏன் அப்படியொரு ஆசை வந்ததோ தெரியவில்லை. அல்லது கரடி அப்போது எதன் குறியீடாக இருந்ததுவோ! அதுவும் புரியவில்லை. அக்கரடி தனக்கான காட்டுக்குள் ஊர்சோனை வளர்த்துவந்தது என்பதே மூலக் கதை.