Posts

அன்புகொண்டு மரணத்தை அழகுசெய்தாள் என் பெரியதாய்.

Image
                                            அமரர். ஆசீர்வாதம் யோசேப்பினா மீனும்,திருக்கையும் தின்று வளர்ந்த பூனை எப்படி இருக்கும் என்பதற்கு அந்தக் குண்டுப் பூனை நல்லதொரு உதாரணம். அது பதுங்கியதை நான் கண்டதில்லை. எப்போதுமே ராஜநடையும் கம்பீரமான தோற்றமுமாகவே அது இருந்தது. யாரோ வீட்டில் வாய்வைத்து  விழுந்த அடியில் அதன் கண்ணொன்று சிவந்து வீங்கிய கட்டியொன்று நிரந்தரமாகிப்போனது. பிற்காலத்தில் அது பெரியம்மா வீட்டின் பின்புறக் காணியிலேயே தங்கிக்கொண்டது. அந்தக் குண்டுப்பூனையின் பசிக்கு பெரியம்மாவீட்டில் நல்ல தீனி கிடைத்தது. தன்னை பெரியம்மாவீட்டின் ஒரு உறுப்பினராக மாற்றிக்கொள்ள ஒரு நல்ல பிள்ளையாய் நடந்துகொண்டிருந்தது. பெரியம்மா அந்தப் பூனைக்கு சாப்பாடு வைத்து உண்ணுமளவுக்கு அந்த வீட்டில் இடம்பிடித்துக் கொண்டது. பூனைக்குப் பயந்த தாயின் வீர புத்திரன் நான். பூனைப்பயம் ஒரு பழக்கமாய் என்னிடமும் தொற்றிக்கொண்டது.  அதுதான் என்னை பெரியம்மா வீட்டிற்கு அடிக்கடி போகாமல் தடுத...

கதை வீடு

Image
பிரதிக்குள் குடிபுகல்  நான் வார்த்தைகளால் கட்டப்பட்ட கதைவீடு ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் பெயர் சனாதனன். இந்தக் கதைவீட்டின் கீழ்த்தட்டில் மூன்று அறைகள். அவற்றில் ஒன்றில் நான்,மற்றதில் கவிஞர் பைரவன், மற்றதில் என்னுடைய தம்பி தங்கியிருக்கிறோம். இது ஒரு வாடகை வீடுதான். எங்கள் அறைகளுக்கு தனித்தனியே குழியலறைகள் இருக்கின்றன. சமையலறை மட்டும் பொது.அனாலும் நாங்கள் மூவரும் வேறுவேறு நேரத்தில் வேலைக்குச் செல்வதால் ஒரே நேரத்தில் சமையலறையில் சந்தித்துக் கொள்ள சந்தர்ப்பமில்லை. எங்கள் மூவரின் வருமானத்தில் ஒவ்வொரு பங்கையும் இந்தக் கதைவீட்டின் உரிமையாளராகிய மிஸ்டர் எழுத்தாளருக்கு தவறாமல் கொடுத்துவருகிறோம். எழுத்தாளரும் நிரந்தரமாக வீட்டில் குந்தமுடியாதவாறு இந்தப் பொருளாதார உலகத்துள் உழல்பவர்தான். நீங்கள் வாருங்கள் விறாந்தைக்குள் வந்ததும் முன்னால் இருப்பது என்னுடைய அறை. இந்த அறைக்கு நீல வர்ணம் பூசியிருக்கிறேன். என் கடலின் மீதான நேசத்தில் இவ்வாறு செய்தேன்.வீட்டுக்கு வருபவர்கள் உண்பதற்கும்,குடிப்பதற்கும் கதைகளையே கொடுப்பது எங்கள் வழக்கம் நீங்களும் கொஞ்சம் ‘கதை’சாப்பிடுங்கள். ...
Image
தனிமையோடு இருக்கிறான் தனியன். தனிமைக்கு இரண்டு வாசல். ஒன்று துயருக்கு, அடுத்தது எபோதுமே புதிராய் இருக்கிறது. புதிரின் மீது மொழியை விரிக்கிறான். மொழிச்சுருள் கலைந்து புதிருக்குள் போகிறது. ஒருகால் தன்னில் ஊன்றி, மறுகால் உயர்த்தி புதிரில் தேடுகிறான் தான் விரிய தக்கது கிடைக்குமென்று. மொழிவிரிப்பு புதிரோடு தாக்கமுறுகிறது காலால் கோலி கவிதையெனச் சொல்கிறான். மறுகதவால் யார்,யாரோ வருகிறார்கள்,போகிறார்கள். தனிமை ஸ்தம்பிப்பதற்காக அல்ல என்கிறான் இவன். எப்போதுமே சாத்தப்படக்கூடிய கதவுகளுக்குள் நின்றபடிதான் எத்தனை வாதங்கள்! தனிமைக்கு இன்னமும் எத்தனை கதவுகளை எவரெவர் காண்கின்றனரோ.

திரைப்பட ரசனைக் குறிப்பு.

Image
நம் சமூகம் என்ற கூட்டுமனம் ஒரு வகை ஒழுங்கைக் கண்டடைந்திருக்கிறது. அந்த ஒழுங்காலான தளத்தில்தான் தன் அனைத்துவகையான நிகழ்த்துதலையும் செய்துவருகிறது. இந்தக் கூட்டு மனதின் அடியில் கசிந்துகிடக்கும் துயரமும்,எஞ்சிக்கிடக்கும் தோல்வியும்,விடுதலை உணர்வும்,தேசப்பற்றும்,குற்ற உணர்வும் இதன் எல்லா வகையான இயக்கத்திலும் தாக்கம் செலுத்திவருவது இயல்பானதே அதை மீறும் மனோநிலைக்கு நாம் இன்னமும் வரவில்லை. நமதுமொழி கதைகளின் கனத்தை வருந்திச் சுமக்கின்ற காலமிது. சொல்லிச்சொல்லி கனம்குறைக்க கதைசொல்லிகள் பலரை ஈன்றபடியிருக்கிறாள் நம் மொழித்தாய். ஈரத்தில் நனைந்த எறும்புகள் ஊர்வதைப்போலத்தான் நாம் கதைகளைக் கொண்டுவந்திருக்கிறோம். இறக்கிவைத்து இளைப்பாற ஒரு நாடு கிடைத்திருக்கிறது,அவகாசமும் கிடைத்திருக்கிறது. கொண்டுவந்த கதைகளோடு வந்த இடக்கதைகளும் பின்னிக்கொள்கின்றன.                      மொழி என்பதன் அடிப்படைக் குணம் அசைதல்தான் அந்த அசைதலின் லாவகத்தை உணர்ந்தவர்களே கலைஞர்கள். அசைதல் ஓர் அனுபவம். கலையும் அவ்வாறே. ...

ஒழுக்கக் கோர்வை.

Image
காலையில் வேலைக்கு கூட்டிச் செல்வதற்காக தியாகு வாகனம் கொண்டுவந்திருந்தான். நான் வாகனத்தில் ஏறும்போது அவதானித்தேன் எங்கள் வீதியில் எங்கள் வீட்டிலிருந்து நான்காவதாய் தள்ளியிருந்த அந்த வீட்டின் முன்புறம் குந்தியிருந்து அவள் அழுதுகொண்டே இருக்கிறாள். நேற்று வேலை முடிந்து வரும்போதும் அவள் அங்கேதான் இருந்தாள்,இரவு அவளுடைய வீட்டிற்கு காவற்துறையினரின் வாகனம் வந்துபோனதையும் அவதானித்தேன். அவளைப் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாகவே இருந்தது, ஆனால்/ அவளுடைய கணவன் மிகவும் மோசமானவன்,யாழ்ப்பாணத்தை அப்படியே பிரட்டிக்கொண்டுவந்து கனடாவில் வாழ்பவன். எப்போது பார்த்தாலும் வெள்ளை,சிவப்பு இனத்தினரைத்தவிர மஞ்சள்,கறுப்பு இனத்தினரோடு கொஞ்சம் கடுகடுப்பாகவே நடந்துகொள்பவன். அதிலும் தமிழர்கள் யாரேனும் அவன் வீட்டுக்குப் போனால் ஊரையும் குறிச்சியையும் விசாரிக்கத் தொடங்கிவிடுவான். மாவீரர் தினம் ஒன்றிற்கு காசு சேர்க்கச் சென்றபோது என்னுடனும் அப்படித்தான் நடந்துகொண்டான். எனக்கு அவன்மீது கொஞ்சமும் மரியாதை இல்லை. அவனுடைய ஒருவகை கோணல் பார்வையை பார்க்கும்போதே முகத்தினில் குத்தவேண்டும்போல இருக்கும். ஆனாலும் அவனுடைய மனைவிய...
இப்னுபதூதாவும், இலக்கியக் கூட்டமும். ( முன்னுரை) டொரன்ரோவில் தேவ அபிரா எழுதிய ‘இருள் தின்ற ஈழம்’ புத்தக வெளியீடு நிகழ்ந்தபோது. நான் அதில் பேசுவதற்காக கேட்கப்பட்டிருந்தேன்.புத்தகத்தை வாசித்தபோது சில ஆண்டுகளின் முன்னர் என்னை ஈர்த்திருந்த தேவ அபிராவின் கவிதைகள் இம்முறை வாசித்தபோது எனக்கு எவ்வகைக் கலை அனுபவத்தையும் ஏற்படுத்தவில்லை. அதற்கு எழுத்தாளர் மட்டுமல்ல, காலமும், சூழலும்,வாசகரும் கூடத்தான் காரணம். ஆனால் அக்கவிதைகளை வாசித்தபோது அவை நவீன கவிதைகளாய் இருந்தபோதும் மரபை அறுத்துவிடாதவையாய் இருந்தன. ‘தமிழ்க்கவிதையின்’ அடையாளங்களாகவே அவற்றைப் பார்த்தேன். ஆனாலும் எனக்கு புதுமை வேண்டியிருக்கிறதே. தேவஅபிரா நிதானமான ஒருகவிஞர்,சமூக அக்கறை அவருடைய கவிதைகளில் இருக்கின்றது. ஆனாலும் ஈழத்து நவீன கவிதையின் போக்கிலிருந்து விலகாதவை அவை.நவீன கவிதைப் போக்குக்குள் காத்திரமானவை என்றுகூடச் சொல்லலாம்.  சிங்களதீபத்தில் சிறுபான்மை இனங்களுக்கான ஜனநாயகம்,போரின் விலை,தேர்தல்,சிங்களதேசம்,எலும்புக்கூடும் இரண்டுகனவுகளும்,விடுதலை, போரின் விலை, இவை புத்தகத்தில் வந்த கவிதைகள் சிலவற்றின் தலைப்புகள். கவிதைக்க...

பிரண்டையாறு கதைப்புத்தகம்பற்றி த.அகிலன்.

கடலுக்கு அழைத்துச் செல்லும் கதைகள். ”எப்போதும் எனது வார்த்தைகளுக்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது” என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது.  இதற்குப்பின்னால் வருகிற என்னுடைய எல்லா வார்த்தைகளும் முடிந்த முடிவுகளோ மாற்றமுடியாத தீர்மானங்களோ கிடையாது. முடிந்த முடிவுகளாக எதையும் அறிவித்துவிடமுடியாத அரசியலறிவும், இலக்கிய அறிவுமே எனக்கிருக்கிறது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன். புத்தகத்தின் சரி பிழைகளையோ, உள்ளமை, இல்லாமை பற்றியோ எனக்கெந்த விசனங்களும் கிடையாது.  மெலிஞ்சி முத்தனின் கதைகள் என்னை அழைத்துச் சென்ற பாதையை விபரிப்பதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். வாசிப்பின் பயணம் என்பது, அதிசயங்களைத் தேடுகிற பயணம்போல திருப்பங்களோடும், விருப்பு விருப்பின்மைகளோடும் ஆச்சரியங்களோடும் தன்பாட்டுக்கு நிகழ்வது என்று நான் நம்புகிறேன். உண்மையில் கூட்டங்களில் பேசுவது குறித்து எனக்கு அச்சம் இருக்கிறது. யார் யாருடைய கோபத்துக்கெல்லாம் ஆளாகவேண்டியிருக்குமோ? இவரை இவரையெல்லாம் திருப்திப்படுத்த வேண்டியிருக்குமோ? என ஒரு நடுக்கம் இருந்தது. பேசாமல் புனைபெயரில் பேசமுடியு...